தங்களின் குழந்தைகள் உடல்நலத்துடன் இருக்கவேண்டும்- நன்றாகப் படிக்க வேண்டு மென்று அனைத்து பெற்றோர்களும் விரும்பு வார்கள். அவ்வாறு அவர்கள் இல்லை யென்றால் பெற்றோருக்கு அதிகமாக கவலைகள் உண்டாகும்.
ஒரு குழந்தை படிப்பில் சரியாக கவனம் செலுத்தாமல் இருப்பதற்குக் காரணம்- அந்தக் குழந்தையின் ஜாதகத்திலிலிருக்கும் புதன், சந்திரன், குரு ஆகிய கிரகங்களின் நிலைமைதான்.
ஒரு குழந்தையின் ஜாதகத்தில் சந்திரன் சரியில்லையென்றால், அளவுக்கதிகமான சிந்தனைகள், மனபயம் உண்டாகும். சிலருக்கு வயிறு சம்பந்தப்பட்ட நோய் வரும். சந்திரன் 6, 8, 12-ல் இருந்தால், குழந்தையின் உடல்நலம் பாதிக்கப்படும். சில குழந்தைகள் அதிகமாக பிடிவாதம் பிடிப்பார்கள்.
ஜாதகத்தில் புதன் சரியில்லையென்றால், அந்தக்குழந்தை எப்போதும் மனக் குழப் பத்துடன் இருக்கும். அதை யாரிடமும் கூறாது. சொன்னால் மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்ற கலக்கத்துடனே இருக்கும்.
புதன் அஸ்தமனமாக இருந்தால் வயிற்றில் பூச்சி, தோலில் நமைச்சல், படை இருக்கும். நினைத்த நேரத்தில் எந்தச் செயலையும் அந்தக்குழந்தையால் முடிக்க முடியாது.
குரு சரியில்லையென்றால் அந்தக் குழந்தை யால் நினைத்த காரியத்தை சரியாக முடிக்க முடியாது. மேற்படிப்பிற்குச் செல்லும் போது தடைகள் உண்டாகும். வீட்டில் நோய், பணப் பிரச்சினை இருக்கும். தாத்தா- தந்தை உறவு சுமுகமாக இருக்காது.
ஒரு ஜாதகத்தில் 2-ஆம் பாவத்தில் பாவ கிரகங்கள் இருந்தால் அல்லது பார்த்தால் இளம்வயதில் பல பிரச்சினைகள் உண்டாகும். சரியாகப் படிப்பு வராது. அல்லது படிக்க முடியாத சூழல் உண்டாகும்.
2-ஆம் பாவத்தில் செவ்வாய் இருந்து, 2-ஆம் பாவாதிபதி அஸ்தமனமாக இருந்தால், தான் என்ன பேசுகிறோம் என்றுகூட தெரியாத நிலை இருக்கும். படிப்பு சரியாக வராது. பேசவேண்டிய நேரத்தில் பேசமுடியாமல் தவிப்பார்கள். மனதில் நினைப்பதை வெளியே கூறமுடியாத நிலை ஏற்படும்.
ஒரு ஜாதகத்தில் சந்திரன் பலவீனமாக இருந்து, அதற்கு 8-ஆம் இடத்தில் சனி இருந்தால், படிக்கும் காலத்தில் உடலில் பல பிரச்சினைகள் ஏற்படும். அடிக்கடி ஜுரம் வரும்.
ஒரு குழந்தையின் ஜாதகத்தில் 8-ல் பலவீனமான சந்திரன், 12-ல் செவ்வாய் இருந்தால், 13 வயதுவரை சரியாகப் படிக்கமுடியாத நிலை இருக்கும். உடல்நலம் பாதிக்கப்படும்.
செவ்வாய், சனி அல்லது செவ்வாய், சனி, சூரியன் அல்லது செவ்வாய், சூரியன், சுக்கிரன் லக்னம் அல்லது 4, 8, 12-ல் இருந் தால், படிக்கும் காலத்தில் பல பிரச்சினைகள் ஏற்படும்.
ஒரு வீட்டிற்கு தென்கிழக்கு திசையில் வாசல் இருந்து, படிக்கும் குழந்தை வடமேற்கு திசையில் படுத்தால், அந்தக் குழந்தைக்கு சரியாகப் படிப்பு வராது. படிக்கும் காலத்தில் உடல்நலம் பாதிக்கப்படும். வீட்டில் மகிழ்ச்சி இருக்காது.
ஒரு வீட்டிற்கு தென்மேற்கு திசையில் பிரதான வாசல் இருந்து, குழந்தை தென் கிழக்கில் படுத்தால், அந்தக் குழந்தை கோப குணம் கொண்டதாக இருக்கும். வீண்செலவு செய்யும். பிறருடன் சண்டை போடும்.
குழந்தைகள் சரியாகப் படிக்கவில்லை என்றால்- பெற்றோரின் பேச்சைக் கேட்க வில்லையென்றால், பெற்றோரின் ஜாதகத்தில் 5-ஆவது பாவாதிபதி அஸ்தமனமாக அல்லது நீசமாக இருக்கும். அல்லது 5-க்கு அதிபதி 6, 8, 12-ல் இருக்கும். 5-ஆவது பாவத்தில் ராகு, சனி அல்லது ராகு, செவ்வாய் இருந்தால் குழந் தையின் உடலில் பாதிப்புஏற்படும்.
5-ஆம் பாவத்தில் குரு நீசமடைந்தால், பெற்றோருக்கு ஐந்து பிள்ளைகள் இருந்தாலும் யாராலும் மகிழ்ச்சி கிடைக்காது.
ஒரு ஜாதகத்தில் லக்னத்தில் சூரியன், சனி, ராகு சேர்ந்திருந்தால், பிள்ளைகள் படிக்கும் காலத்தில் பெற்றோருக்குப் பிரச்சினை ஏற்படும்.
ஒரு வீட்டின் தென்மேற்கு திசை காலிலியாக இருந்து, தென்கிழக்கில் நீர்த்தொட்டி அல்லது கிணறு இருந்தால், அங்கு வசிக்கும் பிள்ளை கள் கோபகுணம் கொண்டவர்களாக இருப் பார்கள். நன்கு படிக்கமாட்டர்கள்.
பரிகாரங்கள்
வீட்டில் பச்சை, அடர்த்தியான நீலம், சிவப்பு வண்ணங்கள் இருக்கக்கூடாது. பிள்ளைகளின் படுக்கையறையின் சுவர் வெள்ளை அல்லது வெளிர் நிறங்களில் இருக்க வேண்டும். குழந்தை கிழக்கில் தலைவைத்துப் படுக்கவேண்டும். படுக்கும் விரிப்பின் நிறம் அடர்த்தியாக இருக்கக்கூடாது. மென்மை யான நிறத்தில் இருக்கவேண்டும். இரவில் படுப்பதற்குமுன்பு, சிறிது வெல்லம் சாப் பிடலாம். குழந்தையின் தந்தை தினமும் சூரியனை வழிபட வேண்டும். புதன்கிழமை விநாயகரை நான்குமுறை சுற்றிவந்து வழி படவேண்டும். வெள்ளிக்கிழமை மாலையில் குழந்தையின் தாய், துர்க்கைக்கு விளக்கேற்றி பூஜை செய்வது நற்பலன் தரும்.
செல்: 98401 11534